சென்னை கண்ணகி நகரில் வறுமை காரணமாக 3 மாத பெண் குழந்தையை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீஜி-வினிஷா தம்பதியினர், தங்கள் குழந்தையை விற்க உதவியதாக சிவரஞ்சனி, சகாய மேரி, சரளா, சுமதி ஆகியோருடன் சேர்ந்து ரூ.2.20 லட்சத்திற்கு விற்றுள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை விற்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், பெற்றோர், வாங்கிய தம்பதி, உதவியவர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.