சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலில், தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் இன்ஜினியரிடம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அனில் சவுத்ரி (25) பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பெண் இன்ஜினியரின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.