வியாசர்வாடியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஜோஸ்வா, வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த ஜோஸ்வாவின் குடும்பத்தினர் நேற்று தேவாலயத்திற்கு சென்றிருந்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.