சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ விஜய் தாமு, இரண்டடி வாளைப் பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவைக் கைது செய்யக் கோரி, சென்னை காவல் ஆணையர் மற்றும் டிஜிபி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.