நகை பறித்த நடத்துநர் கைது

0பார்த்தது
நகை பறித்த நடத்துநர் கைது
சென்னையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், 'இண்டியன் ஏர்லைன்ஸ்' விமானப் பணிப்பெண்ணான சுவாதி லட்சுமியின் நகை பையை திருடிச் சென்றார். கேரளாவில் தாயைப் பார்த்துவிட்டு கடந்த 30ம் தேதி சென்னை திரும்பிய சுவாதியிடம் இருந்து 4 சவரன் தங்க நெக்லஸ், வெள்ளி செயின், இரண்டு மொபைல்போன்கள் பறிக்கப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தற்காலிக நடத்துனர் யோகேஸ்வரன் என்பவரே குற்றவாளி என தெரியவந்து, அவர் கைது செய்யப்பட்டார்.