சென்னை எர்ணாவூர் பகுதியில் நேற்று மாலை ஆங்காங்கே காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள், பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக அச்சமடைந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இறந்த காகங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.