அரக்கோணம் பணிமனையில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு சென்ட்ரல் – அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம் – திருத்தணி காலை 4, 5 மணி, திருத்தணி – அரக்கோணம் இரவு 9:15, இரவு 11:10, மற்றும் திருத்தணி – சென்ட்ரல் காலை 6:30 மணி ரயில்கள் இந்த ஐந்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.