சென்னை ராயபுரத்தில் நடுரோட்டில் கியாஸ் லோடு வேன் ஓட்டுநர் ரகு (42) அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லறை சாலை சந்திப்பில் கியாஸ் லோடு வேன், ஆட்டோ மீது மோதியதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (32), வேன் ஓட்டுநர் ரகுவை மார்பில் குத்தியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராயபுரம் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.