மின்சார பயணிகள் அவதி: கூடுதலாக 60பேருந்துகள் இயக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் ஏப்ரல் 5-ந் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகளின் வசதிக்காக நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் கோரியுள்ளது. ஏற்கனவே, ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம், கிண்டி, தாம்பரம் வழியாக 75 பேருந்துகள், கிண்டி, தாம்பரம் வழியாக 43 பேருந்துகள், தாம்பரம் கூடுவாஞ்சேரி வழியாக 64 பேருந்துகள், கடற்கரை ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் வழியாக 121 பேருந்துகள், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக 55 பேருந்துகள், பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக 20 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுகின்றன.
