சென்னையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் மின்சார பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. மின்சார பாதைகளுக்கு அருகே பட்டம் விடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.