காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

144பார்த்தது
காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது. இந்த காலத்தில் விசைப்படகுகளுக்கு அனுமதி இல்லை. இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தடைக்காலத்தால் மீன் வரத்து குறைந்து, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வஞ்சிர மீன் கிலோ ரூ.1,500க்கும், பாறை, சங்கரா போன்ற மீன்கள் கிலோ ரூ.700க்கும் மேல் விற்பனையாகின்றன.

தொடர்புடைய செய்தி