ராயபுரத்தைச் சேர்ந்த கோபிநாத், காசிமேடு பகுதியைச் சேர்ந்த இருவருடன் நேற்று அதிகாலை மீன்பிடிக்க படகில் கடலுக்குச் சென்றார். படகில் நிலைதடுமாறி மூவரும் கடலில் விழுந்தனர். அவர்களில் இருவர் நீந்தி படகில் ஏறினர். ஆனால், கோபிநாத் படகுக்குச் செல்ல முயன்றபோது, பலத்த காற்று மற்றும் கடல் அலை காரணமாக நீந்த முடியாமல் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.