கத்தியை காட்டி பணம் பறிப்பு: நான்கு பேர் கைது

0பார்த்தது
கத்தியை காட்டி பணம் பறிப்பு: நான்கு பேர் கைது
ராயப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலீல்(26) கடந்த மாதம் 30ம் தேதி ஓட்டேரி சுடுகாடு வாசலில் நண்பருக்காக காத்திருந்தபோது, 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 8,200 ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து தலைமை செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை பறித்த சுரேஷ், சதீஷ்குமார், உதயகுமார், மற்றும் வசந்தகுமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.