சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த 72 வயது விஸ்வநாதனிடம், உறவினர்களான ஜெயலட்சுமி (60) மற்றும் கலைவாணி (33) ஆகியோர் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாகக் கூறி ரூ. 84 லட்சம் பெற்றுள்ளனர். பணத்தைத் திரும்பத் தராததால் விரக்தியடைந்த விஸ்வநாதன் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து படப்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.