ராயபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து பெண் குழந்தையை தூக்கிச் சென்ற பெண், ஐந்து மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டார். விசாரணையில், குழந்தையை கடத்திய புளியந்தோப்பைச் சேர்ந்த ரோஸ்மேரி(39) மற்றும் அவருக்கு உதவிய சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முகலிவாக்கத்தைச் சேர்ந்த கீதா(29)வுக்கு கடந்த 15ஆம் தேதி குழந்தை பிறந்தது. அப்போது உதவியதாகக் கூறி, குழந்தையுடன் மாயமான பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.