குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம்: ஐஐடி சாதனை

172பார்த்தது
குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம்: ஐஐடி சாதனை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் 2023 தரவுகளின்படி, 10.1 கோடி இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக, சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையில், குறைந்த செலவில் துல்லியமான நீரிழிவு கண்காணிப்பு சாதனத்தை (CGM) கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் நீண்ட கால பயன்பாடு, நம்பகமான தரவுகள் ஆகியவற்றை உறுதி செய்வதோடு, இதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.