சென்னையில் கொடுங்கையூர் போலீசார் நேற்று ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான சரக்கு வேனை சோதனை செய்தனர். அதில் 200 கிலோ குட்கா புகையிலை கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வேன் கொடுங்கையூரைச் சேர்ந்த சல்மான் ஷெரிப் என்பவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.