சென்னையில் மகனை கொன்ற தாய்: கைது

0பார்த்தது
சென்னையில் மகனை கொன்ற தாய்: கைது
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வீரசெல்வம் என்பவரின் மனைவி சிவரஞ்சனி, தனது 6 வயது மகன் கிருஷ்ணனை விளையாட்டுத்தனமாக கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கியதில் அவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் கடந்த 2ம் தேதி இரவு நடந்துள்ளது. மகன்கள் இருவரும் சண்டையிட்டபோது, தாய் சிவரஞ்சனி கிருஷ்ணனின் கழுத்தில் துப்பட்டாவை போட்டு விளையாட்டாக இறுக்கியுள்ளார். இதனால் கிருஷ்ணன் மயங்கி விழுந்தான். அவனை உறங்க வைத்துவிட்டதாக நினைத்து தாய் அவனை படுக்கையில் படுக்க வைத்துவிட்டார். காலையில் அவன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் சிவரஞ்சனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி