புழல் சிறையில் தங்க செயினுடன் சுற்றிய நைஜீரிய கைதி கைது

365பார்த்தது
புழல் சிறையில் தங்க செயினுடன் சுற்றிய நைஜீரிய கைதி கைது
கும்மிடிப்பூண்டி போலீசார் மூன்று நாட்களுக்கு முன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியாவைச் சேர்ந்த நான்சொஜோயசின் (42) என்பவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் கழுத்தில் 6 சவரன் செயின் அணிந்தபடி வலம் வந்துள்ளார். இதையறிந்த சிறைக் காவலர்கள் செயினைப் பறிமுதல் செய்து, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தபோது, செயினை ஆசனவாயில் மறைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி