சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, வாளால் கேக் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில், லயோலா மணி என்பவர் அவரைத் தடுக்க முயன்றபோதும், அதை மீறி எம்எல்ஏ விஜய் தாமு வாளால் கேக் வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.