மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த 20 வயது ஆதி, தனது மதுப்பழக்கத்தால் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். ஒருநாள், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்கிடையில், மனைவியை பார்க்க வந்த அவரது தாய் இந்துமதியையும் ஆதி கத்தியால் தாக்கியுள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார், ஆதியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.