ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

0பார்த்தது
ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவு மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது கைப்பேசி, ப்ளூ-டூத், ஹெட்-செட் போன்ற சாதனங்களை கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது. பணி தொடங்குவதற்கு முன்பு நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணியில் ஈடுபட வேண்டும். பணி முடிந்த பின்னர் ஓட்டுநர்களிடம் இருந்து அவர்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி