ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ரயில்வே எஸ். பி. ஈஸ்வரன் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே எஸ். பி. உத்தரவிட்டுள்ளார்.