தமிழ்நாடு அரசு, தாயுமானவர் திட்டத்தின் கீழ் இன்று முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிறது. 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இந்தச் சேவையை அரசு அளிக்கிறது. இந்தத் திட்டத்திற்கான வயது வரம்பை 70-லிருந்து 65 ஆகத் தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைவார்கள்.