திருவொற்றியூர் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுக்க திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் தவறியதாகவும் சென்னை காவல் ஆணையருக்கு புகார் வந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து, காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், ஆய்வாளர் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கு கடும் நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.