வணிக சிலிண்டர் பதுக்கிய இருவர் கைது

அபிராமபுரம் பகுதியில் கே.டி.எஸ். ராஜா மற்றும் ஜெயசந்திரன் ஆகியோர் உரிமம் இன்றி வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 703 வணிக சிலிண்டர்களைப் பறிமுதல் செய்து, ராஜா மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர்.
