கோயம்பேடு: பெண் பயணியிடம் செயின் பறித்த இருவர் கைது

332பார்த்தது
கோயம்பேடு: பெண் பயணியிடம் செயின் பறித்த இருவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ஆர்த்தி (20) என்பவர், உறவினர்களுடன் ஆந்திரா செல்ல நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆர்த்தியின் ஒரு சவரன் தங்கச் செயினை பறித்து தப்பினர். இது குறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முகமது ஜாபர் (27) மற்றும் பாடியைச் சேர்ந்த விவேக் (32) ஆகியோரைக் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you