திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா (56) மற்றும் சுலோச்சனா (55) தம்பதி முகலிவாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். சுலோச்சனாவிற்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. சொந்த ஊர் செல்வதற்காக ராஜா போரூர் சுங்கச்சாவடி அருகே காத்திருந்தபோது, சுலோச்சனா கள்ளக்காதலன் வேதநாயகத்துடன் பைக்கில் வந்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜா, சுத்தியலால் மனைவியை தாக்கியுள்ளார். இதைப் பார்த்த வேதநாயகம், தனது நண்பருடன் சேர்ந்து ராஜாவை தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வானகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.