வியாசர்பாடியைச் சேர்ந்த 30 வயது பெண், சூளையைச் சேர்ந்த தீபக் (34) என்பவருடன் பழகி வந்துள்ளார். தீபக் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். இதைத் தவிர்த்த அப்பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எம்.கே.பி. நகர் போலீசார் தீபக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.