
கண்ணகி நகரில் மாயமான சிறுமி மீட்பு: போலீசார் விசாரணை
துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த 35 வயது இன்பராஜ் என்பவரின் மகள், ஆறாம் வகுப்பு மாணவி இவாஞ்சலினா, நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றபோது மாயமானார். கண்ணகி நகர் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிறுமி தனது உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அவரை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

















