பள்ளிக்கரணையில் 400கிலோ குட்கா பறிமுதல்: கடைக்காரர் கைது

1பார்த்தது
பள்ளிக்கரணையில் 400கிலோ குட்கா பறிமுதல்: கடைக்காரர் கைது
சென்னையின் பள்ளிக்கரணை பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பீகாரை சேர்ந்த நந்தலால் குமார் (29) என்பவர் தனது கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கடையில் இருந்து சுமார் 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.