சூதாட்டத்தில் ஈடுபட்ட 5பேர் கைது: 80லட்சம் பறிமுதல்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஒரு கட்டிடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 80 லட்சத்து 58 ஆயிரத்து 30 ரூபாய் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
