சென்னையில் கோடை வெப்பம் மற்றும் நீர்வறட்சி காரணமாக பாம்புகள் குளிர்ச்சியான, ஈரப்பதம் உள்ள இடங்களைத் தேடி வீடுகளுக்குள் நுழைகின்றன. இதனால், சென்னை மாவட்ட எல்லையில் வீடு அல்லது அதைச் சுற்றி பாம்பு தென்பட்டால், உடனடியாக வனத்துறையின் அவசர உதவி எண்ணான 044 – 2220 0335-க்கு தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இது பொதுமக்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.