சென்னை: தேர்தல் நடத்தினால் கட்டிட கட்டுமான பணி பாதிக்கும்.. விஷால்

52பார்த்தது
சென்னை: தேர்தல் நடத்தினால் கட்டிட கட்டுமான பணி பாதிக்கும்.. விஷால்
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தினால் சங்க கட்டிட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும். எனவே நிர்வாகிகளின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது என்று நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்த கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கபட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும்.

எனவே, உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என பதில்மனு கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பின் விரிவான வாதத்துக்காக வழக்கை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி