சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் ரயில் மாம்பலம்-கோடம்பாக்கம் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாம்பலம் இருப்புப் பாதை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மௌண்ட்-கிண்டி இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மற்றொருவர் மீது புறநகர் ரயில் மோதி உயிரிழந்தார். இது குறித்து தாம்பரம் இருப்புப் பாதை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.