திருவள்ளூர் அருகே, திருமணமான 5 மாதங்களிலேயே கெளசல்யா (20) என்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் ராஜேஷ், சமையலறையில் தவறி விழுந்து இறந்ததாகக் கூறினார். ஆனால், கெளசல்யாவின் பெற்றோர் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், ராஜேஷின் கள்ளக்காதலுக்கு கெளசல்யா இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்து விபத்து நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, கணவர் ராஜேஷ், அவரது கள்ளக்காதலி தீபிகா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.