சென்னையில் நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை; எனது படங்கள் திரைக்கு வராது. சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு படங்களை நடித்தேன். நான் பார்க்காத ஹீரோயினா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பது தான். எனக்கு நடந்த தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம். என்னை அடிமையாக வைத்திருந்தார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.