சென்னை மெட்ரோ ரயில் கட்டம் - 1இல் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், Anti-Drag Feature தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புடவை, துப்பட்டா, பை பட்டை போன்ற மெல்லிய பொருட்கள் ரயிலின் கதவுகள் மூடும்போது சிக்கிக்கொண்டால், அதை உடனே கண்டறிந்து பயணிகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.