சென்னை: இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு

0பார்த்தது
சென்னை: இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராபின் பிரஷா (35) அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவன உணவகத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ம் தேதி இரவு நண்பர் அபினேஷ் உடன் நடந்து சென்றபோது, தீனா (19) என்பவர் வழிமறித்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ராபின் பிரஷா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டு, தீனா, அவரது உறவினர் கிரி (27) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி