நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் (மே 26) உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மே 26) பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.108.01க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.