சென்னை: பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் பல கோடி ரூபாய் சொத்து குவிப்பு

482பார்த்தது
சென்னை: பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் பல கோடி ரூபாய் சொத்து குவிப்பு
விபச்சார தடுப்பு பிரிவின் பெண் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடந்த எட்டு ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 5.42 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் பல்வேறு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.