சென்னை: ஆளுநர் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

242பார்த்தது
சென்னை: ஆளுநர் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு
தமிழக ஆளுநர் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் செல்லும்போது முன்பு 10 பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி