அதிமுக இரண்டு தரப்பாக பிரிந்துள்ளது. இந்தநிலையில் எஸ்.பி வேலுமணி, பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய வேண்டும், பிரிந்தவர்கள் சேர வேண்டும், கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றும், இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் என்றும் கூறியிருந்தார். அதன்படியே, அதிமுக பொதுக்குழுவை கூட்ட எஸ்.பி வேலுமணி தரப்பு கையெழுத்து பெற்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.