சென்னையில், அடையாறில் நாளை காலை 10.30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள வேளச்சேரி துணை மின் நிலைய வளாகத்தில், அடையாறு செயற்பொறியாளர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடக்கும். இதில், அடையாறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று, தங்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.