சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு, கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு, புதுச்சேரி, செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி மற்றும் சேலம் செல்லும் அதிவிரைவு ரயில்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும்.