சென்னை கண்ணகி நகரில், ஸ்ரீதர் - வினிஷா தம்பதியினர் தங்கள் 3 மாத பெண் குழந்தையை தரகர்கள் மூலம் 2.20 லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவத்தில், பெற்றோர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.