சென்னை: மகேந்திரா நிறுவனத்தில் தீ விபத்து

416பார்த்தது
சென்னை: மகேந்திரா நிறுவனத்தில் தீ விபத்து
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள டெக் மகிந்திரா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை அடுத்து, ஐ.டி. ஊழியர்களை காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி