தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி என்பது குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை EDII-TN வளாகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9360221280 அல்லது 8668100181 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.