திருவொற்றியூர்: கோயில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

302பார்த்தது
திருவொற்றியூர்: கோயில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில், கடந்த 3ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கோயில் பின்புறம் சுவர் ஏறி குதித்து, பெருந்தேவி தாயார் சன்னதியில் இருந்த உண்டியலை உடைத்து சுமார் ரூ. 50ஆயிரத்திற்கும் மேல் பணத்தை திருடிச் சென்றார். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் (35) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி