சமூக வலைதளத்தில் போலி ஐடிகளில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்ததாக வளசரவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது சினிமா உதவி இயக்குநர் அளித்த புகாரில், சின்னபோரூரைச் சேர்ந்த பிரைஸ் கிறிஸ்டன்(21) என்பவர் வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.